மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே மூடும் அபாயத்தில் உள்ள அரசுப் பள்ளியைக் காப்பாற்றும் நோக்கில், ஊர்மக்கள் அறிவித்துள்ள பரிசுத் திட்டத்தால் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெற்றோரின் ஆங்கில மோகத்தை சமாளிக்கும் வகையில் 80 சதவிகித அரசு பள்ளிகளில் கடந்த நான்காண்டுகளாக ஆங்கில வழிக்கல்வி படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகிலுள்ள பள்ளியுடன் இணைக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியை மூடி விடாமல் தடுக்க பரிசுத்திட்டம் அறிவித்து, ஊர்மக்கள் சார்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் ஒன்றியம், கோனார்பாளையம் கிராம தொடக்கப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக ஆறு மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அதிலும், கடந்த கல்வியாண்டு முடிவில் ஐந்தாம் வகுப்பு முடித்த இரண்டு மாணவர்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று விட்டதால், மாணவர் எண்ணிக்கை வெறும் நான்காக குறைந்தது. மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அக்கிராம மக்கள் ஒன்றுகூடி பள்ளி வளர்ச்சிக்குழு என்ற குழுவினை அமைத்து தங்களது கிராமப்பள்ளி மூடப்படுவதை தடுக்க முடிவு செய்தனர். இதற்காக, மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டு புதிய மாணவர் சேர்க்கையில் களம் இறங்கினர்.
அதன்படி, இப்பள்ளியில் முதலில் சேரும் 10 பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளியில் சேரும் அனைவருக்கும் ரூ. 5,000 ரொக்கம் மற்றும் இரண்டு செட் பள்ளி சீருடை வழங்கப்படும் என பள்ளி வளர்ச்சிக் குழு அறிவித்துள்ளது. மேலும், பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பை நோட்டீசாக அச்சடித்துப் பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் வினியோகித்துள்ளனர். இதன் பலனாக, இரு மாணவியர் உட்பட மூன்று பேர் பள்ளியில் சேர்ந்ததையடுத்து, மாணவர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. மேலும், ஐந்து மாணவர்கள் பள்ளியில் இணையவுள்ளதையடுத்து, மாணவர் எண்ணிக்கை பன்னிரெண்டாக அதிகரித்துவிடும். இதனால், இப்பள்ளி மூடப்படும் அபாயத்தில் இருந்து தப்பும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.
"மாணவர் குறைவு என தங்களது ஊர் அரசுப்பள்ளி மூடப்பட்டால் பின்னர் வருங்காலத்தில் மீண்டும் இங்கு பள்ளி அமைவது சாத்தியமில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, இப்பள்ளியில் பயின்று தற்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள், ஊர் பெரியவர்கள் என பலரும் ஒன்று கூடி எடுத்துள்ள இம்முயற்சி பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது. இதுபோல, மாணவர் எண்ணிக்கையில் குறைந்துள்ள அரசு பள்ளிகளை முன்னேற்றவும், மாணவர் எண்ணிக்கையை உயர்த்தவும், அந்தந்த ஊர்மக்கள் முயற்சிகளுக்குப் பள்ளி கல்வித்துறையினரின் ஒத்துழைப்பும் அவசியம்.
அரசுப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்தாகிவிட்டது. இசைக்கல்வி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் இலவசமாகவே வழங்கப்படுகிறது எனக் கூறினாலும் யாரும் நம்புவதில்லை. இதனாலேயே, வேறு வழியின்றி ஆசை காட்டி அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது," என்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ் சந்திரகுமார்.